About Us

அன்னை தந்த உயிரும் உடலும் தாய்மொழியாம் தமிழுக்கே எனும் எண்ணத்தோடும்,உலகம் எங்கும் தமிழனின் குரல் முலம் நம் தமிழோசை ஒலித்திட வேண்டும் என்ற பேராவலுடனும், தமிழினம் என்றும் தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் எனும் இலக்குடன் பிறந்த நம் தமிழ் குழந்தைதான் இந்த கிழக்கிந்திய நாடான இந்தோனேஷியா தமிழ்ச் சங்கம்! திரைகடலோடி திரவியம் தேட, அழகிய இந்தோனேஷியாவில் பணி நிமித்தம் ஆங்ககாங்கே குடியேறி பல இடம் சிதறிக் கிடந்த தமிழ் உள்ளங்களை ஓரிடத்தில் ஒன்றினைத்து, ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பழகிக் கொள்வதற்கு, ஒரு இணைப்பு பாலமாக செயல் படுவதுதான் பெருமையுடை நம் தமிழ் சங்கம் ! 2011 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அமைப்பு பல விதமான சோதனைகள / சாதனைகளைக் கடந்து இன்று மாபெரும் அமைப்பாக இயங்கி வருவதில் தமிழுக்கு பெருமைதான்!

இந்தோனேஷியாவிலேயே பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களின்வாரிசுகளுக்கு தமிழ்ப்பாடங்கள் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் தமிழ் அறிவை வளர்க்கும் சேவையால் இன்று நமது தமிழ்ச் சங்கத்தின் சேவையினால் இங்கு பிறந்து வளர்ந்த நம் குழந்தைகள் தமிழ் மொழியை எழுதப் படிக்கநன்றாக அறிந்துள்ளார்கள் என்பதும் நம் தமிழ் சங்கத்தின் பெருமைதான்!.

நோக்கம்

MISSION

குறிக்கோள்

OBJECTIVES